முதல்வர் தலைமையில் 4ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 4ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 4ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், தமிழகத்தில் தொழில் தொடங்குவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காலையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த மாதத்தின் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் சட்டசபை கூட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்