அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வெற்றி சிலம்பம் சார்பில் வேர்ல்டு ஸ்டார் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனைக்காகவும், வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் 3 மணிநேரம் தொடர் சிலம்பம் சுற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பயற்சியாளர் கோபால் தலைமை வகித்தார். போட்டியினை திமுக கவுன்சிலர்கள் இளங்கோ, தமிழ்காந்தன், அல்லிராணி, மீனாட்சி ஆகியோர் துவக்கி வைத்தனர். காலை 9.45 மணிக்கு துவங்கிய சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி 1 மணிக்கு முடிவடைந்தது. 55 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது….