முதல்வரின் சீரிய திட்டங்களால் முதலிடத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை எம்எல்ஏ மாங்குடி பேச்சு

காரைக்குடி, ஏப்.17: காரைக்குடி சூரக்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி ரூ.20 லட்சத்தில் நோயாளிகளின் உடன் இருப்பவர்கள் தங்குமிடம் அமைக்கும் பணி பூமிபூஜை விழா நடந்தது. ஊராட்சி தலைவர் தேவிமாங்குடி வரவேற்றார். எம்எல்ஏ மாங்குடி திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘சுகாதாரத் துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். சுகாதாரத்துறையில் முதல்வரின் சீரிய திட்டங்களால் இந்தியாவில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இந்த பட்ஜெட்டில் கூட சுகாதாரம், கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தலைமை மருத்துவமனையில் இன்னும் பல்வேறு வசதிகள் தேவை உள்ளன.

தலைமை மருத்துவமனைக்கு உரிய டாக்டர்கள் நியமிக்க வேண்டும். ஸ்கேன் டாக்டர், மகப்பேறு டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என முதல்வரிடம், சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தற்போது அமைக்கப்படும் தங்குமிடத்தை தவிர, ஆண்கள், பெண்கள் தனித்தனியாக தங்க வசதியாக மற்றொரு தங்கும் இடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தவிர இம்மருத்துவமனையில் பூங்கா உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்’’ என்றார்.மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ஒன்றியகுழு உறுப்பினர் சொக்கலிங்கம், ஒன்றிய துணைச்செயலாளர் சத்யாராஜா, வார்டு கவுன்சிலர்கள் கணபதி, தெரசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருமங்கலத்தில் பரிதாபம் தனியார் மருத்துவமனையில் ஊசி போட்ட சிறுமி பலி போலீசார் விசாரணை

ஆவணங்களின்றி வந்த சரக்குகள் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.8.04 லட்சம் அபராதம்

கோவை மாவட்டத்தில் செயல்படும்; சட்டவிரோத செங்கற்சூளைகளை ஆய்வு செய்ய குழு