சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், மோசஸ், தியாகராஜன். ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கோரிக்கையாக முன்வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஜாக்டோ-ஜியோ வழங்கியது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை முன்வைத்து 14 கோரிக்கைகள் அதில் கூறப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 3500 சத்துணவு மையங்களை மூடுவதையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர்….