முதலீடுகளை ஈர்க்க திட்டம் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 30 பேருக்கு காதொலி கருவிகள்

திருவாரூர், நவ.28: திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 30 பேருக்கு ரூ.83 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவிகளை மாவட்ட கலெக்டர் சாரு வழங்கினார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய ரேஷன் கார்டு, கல்வி கடன், வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் 246 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். முன்னதாக வழக்கம்போல் தரை தளத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு தலா ரூ.2780 வீதம் மொத்தம் ரூ.83,400 மதிப்பிலான விலையில்லா காதொலி கருவிகளை மாவட்ட கலெக்டர் சாரு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ சண்முகநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலர் புவனா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு