முதலாவதாக அறிவிக்கப்பட்ட தேதி ரத்து அதிகாரிகளுக்கு 10ம் தேதி 2வது பயிற்சி: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை6: முதலாவதாக அறிவிக்கப்பட்ட தேதியை ரத்து செய்து, தேர்தல் அதிகாரிகளுக்கான இரண்டாவது பயிற்சி வரும் 10ம் தேதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 26ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. சென்னை மாநகராட்சியை தவிர, இதர மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளில் பணி அமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வரும் 9ம் தேதி இரண்டாவது பயிற்சி அளிக்க அறிவுறுத்தி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தக்க அறிவுரைகள் ஆணையத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதர அனைத்து மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சியை நிர்வாக காரணங்களுக்காக 10.2.2022 (வியாழக்கிழமை) அன்று நடத்திட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்