முதலாம் ஆண்டு மாணவர்கள் ஜூன் 22ல் வருகின்றனர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

நாகர்கோவில், ஜூன் 20: நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் வாயிலாக இந்த மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. புதிய கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மே 29ம் தேதி தொடங்கியது. மே 31ம் தேதி வரை நடைபெற்றது. ஜூன் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இரண்டு கட்டமாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மேலும் ஜூன் 22ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 2ம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் இதர தனியார் கல்லூரிகளிலும் நேற்று வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வருகை தந்தனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு