முதலமைச்சரின் காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு

 

கோபி, மே 31: கோபி வட்டாரத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோபி தீயணைப்புதுறை சார்பில் நடைபெற்றது. தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த மைய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு தீ தடுப்பு குறித்தும், தீ விபத்து ஏற்படும் காலத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தீ தடுப்பு செயல் விளக்கம் அளிக்க தீயணைப்புத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், கோபி வட்டாரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இத்திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்டு உள்ள மைய பொறுப்பாளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி யூனியன் அலுவலக குடியிருப்பு வளாகத்தில் கோபி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் முருகன் தலைமையில், பொறுப்பு அலுவலர் மாதப்பன், முன்னனி தீயணைப்பு வீரர் கோபாலகிருஷ்ணன், தீயணைப்பு வீரர் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது, தீ விபத்து ஏற்படும் நேரத்தில் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், தீயணைக்கும் கருவியை பயன்படுத்தும் முறை, தீ விபத்து ஏற்படுவதற்காக காரணங்கள் குறித்தும், தீயை கட்டுப்படுத்தும் முறை, தீயை அணைக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோபி பகுதி மைய பொறுப்பாளர்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்