முட்டை வியாபாரி வாகனம் மோதி பலி

 

விருதுநகர், ஜூன் 3: வாகனம் மோதி முட்டை வியாபாரி உயிரிழந்தார். விருதுநகர் அருகே ஆனைக்குட்டத்தை சேர்ந்தவர் காட்டுராஜா(42). இவருக்கு மனைவி கற்பகவள்ளி, இரு மகள்கள் உள்ளனர். இவர் ஓ.கோவில்பட்டியில் முட்டை கடை வைத்துள்ளார். ஊர்களுக்கு டூவீலரில் முட்டை கொண்டு சென்று கடைகளுக்கு வழங்கி பணம் வசூலித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வடமலாபுரம், மத்தியசேனை பகுதி கடைகளுக்கு முட்டை வழங்கி விட்டு மாலை சென்று பணம் வசூலித்து வந்துள்ளார். வசூல் முடித்து இரவு 11 மணியளவில் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் டூவீலரில் வந்த போது எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆமத்தூர் போலீசில் மனைவி கற்பகவள்ளி புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடிவருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்