முட்டத்தில் கடலில் இறந்து மிதந்த ஆமை

குளச்சல், மார்ச் 30: குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்ததாக கடற்கரை சுற்றுலாத்தலமாக முட்டம் கடற்கரை விளங்குகிறது. இங்கு தினமும் மாலை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சென்று பொழுது போக்கி செல்வர். நேற்று முன்தினம் முட்டம் மீன் பிடித்துறைமுக கடல் பகுதியில் ஆமை ஒன்று இறந்த நிலையில் மிதந்து வந்தது. இதை பார்த்த மீனவர் ஒருவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே வேளிமலை வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் வனவர் அஜித்குமார் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இறந்து மிதந்த கடல் ஆமையை மீட்டு கரை சேர்த்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை