முடி வெட்டும்போது நடந்த கொடுமை பெண் தலையில் தண்ணீருக்கு பதில் எச்சில் துப்பிய ஹேர் ஸ்டைலிஸ்ட்: சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ

முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் பிரபல முடி திருத்தும் நிபுணர் ஜாவத் ஹபீப். இவர் கடந்த வாரம் பயிலரங்கு ஒன்றை நடத்தினார். அதில், கூட்டத்தில் இருந்த பெண் ஒருவரை அழைத்து அவருக்கு சிகை அலங்காரம் செய்வதற்கு முயன்றார். அப்போது, ‘தண்ணீர் இல்லை என்றால், எச்சிலை பயன்படுத்துங்கள்,’ என்று சத்தமாக கூறி அந்த பெண்ணின் தலையில் தண்ணீரை தெளிப்பதற்கு பதிலாக எச்சிலை துப்பினார். அவருடைய  இந்த செயல் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. மேலும், சம்பந்தபட்ட பெண்ணும் அவரது இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணான பூஜா குப்தா, மன்சூர்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ஜாவத் ஹபீப் மீது இந்திய தண்டனை சட்டம், தொற்று நோய் சட்டம் 1897, பிரிவு 355 கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள மகளிர் ஆணையம், ‘உத்தரப் பிரதேச போலீசார் இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்,’ என்றும் உத்தரவிட்டுள்ளது.  இதனால், அதிர்ந்து போயுள்ள ஜாவத், தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். …

Related posts

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

“அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு