முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நான் முதல்வன் திட்ட கலந்துரையாடல்

முசிறி, செப்.6: திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முருகராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். வரலாற்று துறை தலைவர் ராஜா ரவீந்திரன் முன்னிலை வகித்தார். சிங்கப்பூர் வைஸ் லீ வைஸ் நிறுவன சிஇஓ காணொளி காட்சி மூலமும், கலந்துரையாடல் மூலமும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து மாணவர்களிடையே பேசினார்.

மேலும் இந்த துறையில் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் வரலாற்று துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியர் பழனிச்சாமி அனைவரையும் வரவேற்றார். பேராசிரியர் முனைவர் அகிலா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரலாற்று துறையினர் செய்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை