முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும்: அமைச்சர் சா.மு.நாசர் அறிவிப்பு

சென்னை: முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்திருக்கிறார். சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா, அரியவகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து செய்தி வெளியானது. இதையடுத்து, சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து,  கடந்த 23ம் தேதி சிறுமி தான்யாவுக்கு  தனியார் மருத்துவமனையில் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 29ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். 21 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தண்டலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி டான்யாவை வீட்டுக்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், சிறுமி டான்யா குடும்பத்துக்கு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. டான்யா குடும்பத்துக்கு விரைவில் வீடு, இடம் ஒதுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார். சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட்சம் செலவானது; அதை முழுவதுமாக அரசே ஏற்கும் என கூறினார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை