முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ₹50 முதல் ₹100 வரை அபராதம் விதித்து எச்சரிக்கை150 பேர் சிக்கினர்

சித்தூர் : சித்தூரில் நேற்று முகக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் ₹50 முதல் ₹100 வரை அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர்.  சித்தூர் முதலாவது காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் பத்மாவதி நேற்று காந்தி சிலை அருகே முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தார். இதுகுறித்து சப்இன்ஸ்பெக்டர் பத்மாவதி தெரிவிக்கையில், `கொரோனா தொற்று மூன்றாவது  அலை எதிரொலியால் மாநில அரசு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணியாமல் செல்கிறார்கள். பலமுறை காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இருப்பினும் ஏராளமான வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணியாமல் செல்கிறார்கள். கொரோனா தொற்று மூன்றாவது அலை அதிகரிக்கக்கூடும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இருப்பினும் பொதுமக்கள் அச்சமின்றி முகக்கவசம் அணியாமல் செல்கிறார்கள். நகர டிஎஸ்பி சுதாகர் உத்தரவின்படி சித்தூர் மாநகரத்தில் முகக்கவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு ஒன்றுக்கு இரண்டு முறை எச்சரிக்கை விடுக்க வேண்டும். 3வது முறையாக முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு ₹50 முதல் ₹100 வரை அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சித்தூர் மாநகரத்தில் முதலாவது காவல் நிலையம் சார்பில் மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் நோயை நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்றால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணிந்து வந்தால் போலீசார் அபராதம் விதிக்க மாட்டார்கள். எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் பின்னால் அமர்ந்து வரும் நபர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கொரோன தொற்றை நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.அதற்கு அனைத்து பொதுமக்களும் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளும், ஆட்டோ டிரைவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று ஒரே நாளில் காந்தி சிலை அருகே 150க்கும் மேற்பட்டோருக்கு ₹50 முதல் 100 வரை அபராதம் விதிக்கப்பட்டது என சப்இன்ஸ்பெக்டர் பத்மாவதி தெரிவித்தார்….

Related posts

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்