மீன் கடைகளில்முத்திரையிடாத30 தராசுகள் பறிமுதல்தொழிலாளர் துறை அதிரடி

நெல்லை, ஏப். 19: பாளையங்கோட்ைட பெருமாள்புரம், அன்புநகர், மகாராஜநகர், புதிய பஸ் ஸ்டாண்ட், தியாகராஜநகர் ஆகிய பகுதிகளில் செயல்படும் மீன் கடைகளில் நெல்லை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுமதி உத்தரவின் பேரில், உதவி ஆணையர் (அமலாக்கம்) முருக பிரசன்னா தலைமையில் தொழிலளர் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்கள் மற்றும் முத்திரை ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பல மீன் கடைகளில் முத்திரை இல்லாத தராசுகளை வைத்து எடை ஏய்ப்பு செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறாக நேற்று ஒரு நாளில் மட்டும் 30 தராசுகளை மீன் கடைகளில் தொழிலாளர் துறையினர் பறிமுதல் செய்தனர். மீன் கடைகளில் முத்திரை இல்லாத தராசுகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை இணை ஆணையர் சுமதி எச்சரித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை