மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் 60 சதவீத மானியத்தில் கடனுதவி: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட மீன்வளத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகிற்கு மகளிர் பிரிவினருக்கு 60% மானியத்தில் ரூ.12 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதுபோல் ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப் பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு மகளிர் பிரிவினருக்கு 60% மானியத்தில் ரூ.15 லட்சம் வழங்கப்பட உள்ளது. மீன்விற்பனை அங்காடி (அலங்கார மீன்வளர்ப்பு-மீன் அருங்காட்சியகம் உள்ளடங்கியது) ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு மகளிர் பிரிவினருக்கு 60% மானியம் ரூ.6 லட்சம் வழங்கப்படுகிறது.கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு அலகு (கடல் அல்லது நன்னீர்) ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.1.20 லட்சம் வழங்கப்பட உள்ளது. புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.2.80 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மகளிருக்கு 60% மானியத்தில் ரூ.4.20 லட்சம் வழங்கப்படுகிறது. புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.2.80 லட்சமும், ஆதிதிராவிடர் மகளிருக்கு 60% மானியத்தில் ரூ.4.20 லட்சமும் வழங்கப்படுகிறது. நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.1.60 லட்சமும் ஆதிதிராவிடர் மகளிருக்கு 60% மானியத்தில் ரூ.2.40 லட்சமும் வழங்கப்படுகிறது.சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.3 லட்சமும், ஆதிதிராவிடர் மகளிருக்கு 60% மானியத்தில் ரூ.4.50 லட்சமும் வழங்கப்படுகிறது. கூண்டுகளில் கடல் மீன்வளர்த்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு ரூ.5 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.2 லட்சம் வழங்கப்பட உள்ளது. பயோபிளாக் குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு ரூ.18 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.7.20 லட்சம் வழங்கப்படுகிறது.புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 0.5 ஹெக்டேருக்கு ரூ.3.50 லட்சம் செலவினத்தில் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியத்தில் ரூ.2.10 லட்சம் வழங்கப்படுகிறது. நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு ரூ.14 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியத்தில் ரூ.5.60 லட்சம் வழங்கப்படுகிறது. 250 முதல் 1000 ச.மீ பரப்புள்ள பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு (1000 சமீ) ரூ.36 ஆயிரத்தில் 50% மானியம் வழங்கப்படுகிறது.எனவே, விருப்பமுள்ளவர்கள் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை-600115. அலு வலகத்தில் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் 16ம்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்….

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்