மீன்பிடி தடைகாலம் தொடர்வதால் தென்னம்பாளையம் மார்க்கெட்க்கு கடல் மீன் வரத்து குறைவு

 

காங்கயம், ஜூன் 10: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.7 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இதில் இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்று கூடிய வாரச்சந்தைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் 33 கால்நடைகளை கொண்டு வந்திருந்தன. அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகளும் வந்திருந்தனர்.

இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 54 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் 16 கால்நடைகள் ரூ.7 லட்சத்திற்கு விற்பனையானது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு