மீன்பிடி, உப்பு, பனை தொழிலாளர்களுக்கான சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு மீன்பிடி, உப்பு மற்றும் பனை தொழிலாளர்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 4ம் நாளான நேற்று காலை திருப்பலி, புனித அந்தோணியார் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை சபை அருட்சகோதரிகள், திருச்சிலுவை ஆங்கில மற்றும் தமிழ் பள்ளிகள் ஆகியோருக்கான திருப்பலி, மறை மாவட்ட வின்செந்தியர்களுக்கான திருப்பலி நடந்தது. காலை 8.30 மணிக்கு அலங்காரத்தட்டு இறைமக்கள்,

புனித கார்மெல் அன்னை அருட்சகோதரிகள், லசால் அருட் சகோதரர்கள், லசால் மேல்நிலைப்பள்ளி ஆகியோருக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. காலை 11 மணிக்கு மீன்பிடி, உப்பு மற்றும் பனை தொழிலாளர்களுக்கான திருப்பலி நடந்தது. மாலையில் புதியம்புத்தூர் பங்கு இறைமக்களுக்கான திருப்பலியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை பனிமய மாதா பேராலய பங்குதந்தை ஸ்டார்வின், உதவி பங்குதந்தை பாலன், களப்பணியாளர் தினகரன் மற்றும் நிர்வாகிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி