மீன்கள் வரத்து குறைவால் விலை உயர்வு

 

ஈரோடு, ஜூன் 24: ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு நாகப்பட்டினம், ராமேஸ்வரன், காரைக்கால், தூத்துக்குடி, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், இந்த வாரம் வெறும் 5 டன் அளவிற்கே கடல் மீன்கள் வரத்தாகி இருந்தது. இதனால், மீன்கள் விலை கடந்த வாரத்தை விட மீன்கள் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்து விற்பனையானது.

மீன்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் நேற்று ஆர்வமுடன் மீன் மார்க்கெட் வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை கிலோவில்: வஞ்சரம்-ரூ.1,200, கடல் பாறை-ரூ.550, சங்கரா-ரூ.400, நெத்திலி மீன்-ரூ.300, அயிலை-ரூ.320, மத்தி-ரூ.300, இறால்-ரூ.700, திருக்கை-ரூ.400, புளூ நண்டு-ரூ.600, முரல்-ரூ.400, அணை மீன்களான லோகு-ரூ.170, ஜிலேபி-ரூ.120, கட்லா-ரூ.170. பாறை-ரூ.160க்கு விற்பனையானது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு