மீனவரை தாக்கிய இரண்டு பேர் கைது

 

மண்டபம், ஜூன் 20: மண்டபம் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் வின்சென்ட் மிராண்டா(45). மீனவரான இவர், மண்டபம் முகாம் சோனைமுத்து என்பவரது விசைப்படகில் கடலுக்கு சென்ற இவர் நேற்று முன்தினம் கரை திரும்பினார். இவருடன் இப்படகில் சென்ற 5 பேருக்கு கூலியாக ரூ.5 ஆயிரத்தை வின்சென்ட் மிராண்டாவிடம் கொடுத்து பங்கு பிரித்து கொள்ளுமாறு சோனைமுத்து கூறினார்.

இதில் சக மீனவர் 3 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய், தனது பங்கு ரூ.ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, எஞ்சிய ரூ.ஆயிரத்தை சக தொழிலாளி கார்த்திக் என்பவருக்கு கொடுக்க மண்டபம் தென் கடற்கரை பகுதிக்கு வின்சென்ட் மிராண்டா சென்றார். அப்பணத்தை பெற்றுக்கொண்ட கார்த்திக் கூடுதல் பங்கு தொகை கேட்டு வாக்குவாதம் செய்தார்.

இது தொடர்பான தகராறில் ஆத்திரமடைந்த கார்த்திக், அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் காலி பாட்டிலால் குத்தினர்.இதில் காயமடைந்த வின்சென்ட் மிராண்டா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இவரது புகாரின் பேரில் மண்டபம் முகாம் முல்லை நகர் கார்த்திக்(32), மண்டபம் சக்திவேல்(37) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மண்டபம் போலீசார் கைது செய்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்