மீண்டும் வந்த கிம் ஏமாற்றம்

10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இண்டியன் வெல்ஸ் தொடரில் களமிறங்கிய பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் (38 வயது, 1476வது ரேங்க்), தனது  முதல் சுற்றில் செக் குடியரசு வீராங்கனை  கேதரினா சினியகோவாவுடன் (25வயது, 53வது ரேங்க்) மோதினார். நீண்ட இடைவெளி, உடல் பருமன்  காரணமாக பந்துகளை ஓடிச் சென்று அடிப்பதில் தடுமாறினார். முதல் செட்டை சினியகோவா 6-1 என கைப்பற்றிய நிலையில், 2வது செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கிம் 6-2 என வென்று பதிலடி கொடுத்தார். எனினும், கடைசி செட்டில் அதிரடி காட்டிய சினியகோவா 6-1, 2-6, 6-2 என்ற கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது….

Related posts

ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல்

சில்லி பாயின்ட்…

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா 2வது முறையாக சாம்பியன்: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அபாரம், ரூ.20 கோடி முதல் பரிசு, ரசிகர்கள் கொண்டாட்டம்