மீண்டும் சதம் விளாசிய சுதர்சன், ஜெகதீசன்: தமிழ்நாடு 3வது வெற்றி

ஆலூர்: விஜய் ஹசாரே கோப்பை  ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 4வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. ஆலூரில்  தமிழ்நாடு-கோவா அணிகள் மோதின. முதலில் களம் கண்ட  தமிழ்நாடு அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சனும், நாரயண் ஜெகதீசனும்  அதிரடியாக விளையாடினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 276ரன் குவித்தனர்.  சுதர்சன் 117(112பந்து, 13பவுண்டரி), ஜெகதீசன் 168(140பந்து, 15பவுண்டரி, 6 சிக்சர்) ரன் வெளுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் இந்த தொடரில் எடுத்த முறையே 2வது, 3வது சதங்கள் இவை.  தொடர்ந்து தமிழ்நாடு 50ஓவர் முடிவில்  4விக்கெட் இழப்புக்கு 373ரன் குவித்தது. கோவா தரப்பில் அர்ஜூன் டென்டுல்கர், சுயாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து  களமிறங்கிய கோவா வீரர்களும் பொறுப்புடன் விளையாடினாலும் இலக்கை எட்ட முடியவில்லை. அந்த அணி 50ஓவர் முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 316ரன் எடுத்தது. அதனால் தமிழ்நாடு 57ரன் வித்தியாசத்தில் 3வது வெற்றியை பதிவு செய்தது. கோவா அணியின்  ஸ்நேஹல் 67, இஷான் 51,  ஏக்நாத் 50,  தீப்ராஜ் 42,  சித்தேஷ் ஆட்டமிழக்காமல் 62ரன் எடுத்தனர். தமிழ்நாடு தரப்பில் சாய்கிஷோர், முகமது, அபரஜித், சித்தார்த், வாரியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்….

Related posts

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து: கால்இறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி; சொந்த மண்ணில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஜெர்மனி