மீண்டும் எகிறும் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.35,720க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஒரு தனி காதல் இருந்து வருகிறது. ஒருவரின் சமூக அந்தஸ்தை காட்டும் உலோகமாக, அவசர நிதி தேவைகளுக்கு உதவும் நண்பனாக, தங்கம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காலத்திலும் அதன் மீதான மோகம் குறைந்தபாடில்லை. தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு, சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஏதேனும் ஒரு சில நாட்கள் மட்டுமே விலைச் சரிவு காணப்படுகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.4465- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.35720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 38632-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து ரூ.67.00-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.4,465க்கும், ஒரு சவரன் ரூ.35,720- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60க்கு விற்கப்படுகிறது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்