மீட்பர் பாதம் பணிவோம்!

முதலில் இறைவனைத் தேடு; அதன்பின் உலகப் பொருளைத் தேடு; இதற்கு மாறாகச் செய்யாதே. பணம் எவருக்கு அடிமையோ அவர்தான் உண்மையான மனிதர். பணத்தை எப்படி உபயோகிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளாதவர்கள் மனிதர்கள் அல்லர். பாலத்தின் கீழே தண்ணீரானது எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். அதைப்போல பணமானது பற்றற்றவர்கள் கையினின்றும் செலவாகிக்கொண்டே இருக்குமேயன்றி ஒருபோதும் சேமித்து வைக்கப்படுவதில்லை.‘‘கலத்திலிருக்கும் நறுமணத்தைலம் முழுவதையும் செத்த ஈக்கள் முடை நாற்றம் வீசும்படிச் செய்துவிடும். இதுபோல சிறிய மதிகேடும் மேன்மையான ஞானத்தைக் கெடுத்துவிடும். தக்கன செய்வதையே ஞானியரின் உள்ளம் நாடும். தகாதன செய்வதையே மூடரின் உள்ளம் நாடும். மூடர் தெருவில் நடந்தாலே போதும். அவரது மடமை வெளியாகும். தாம் மூடர் என்பதை அவரே அனைவருக்கும் காட்டி விடுவார். மேலதிகாரி உன்னைச் சினந்துகொண்டால் வேலையை விட்டுவிடாதே. நீ அடக்கமாய் இருந்தால் பெரும் குற்றமும் மன்னிக்கப்படலாம்.உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவறால் விளைவது. மூடர்களுக்கு உயர்ந்த பதவி அளிக்கப்படுகிறது. செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள். அடிமைகள் குதிரை மீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போல தரையில் நடந்துசெல்வதையும் நான் கண்டிருக்கிறேன். குழியை வெட்டுவோர் அதில் தாமே வீழ்வார். கன்னமிடுவோரைக் கட்டு விரியன் கடிக்கும். கற்களை வெட்டி எடுப்பவர் கற்களால் காயமடைவார். மரத்தை வெட்டுபவர் காயத்திற்கு ஆளாவார். மழுங்கிய கோடரியைத் தீட்டாமல் பயன்படுத்தினால் வேலை செய்வது மிகக்கடினமாக இருக்கும். ஞானமே வெற்றிக்கு வழிகோலும். பாம்பை மயக்குமுன் அது கடித்துவிட்டால் அதை மயக்கும் வித்தை தெரிந்திருந்தும் பயனில்லை. ஞானியரின் வாய் மொழி அவருக்குப் பெருமை தேடித்தரும். மூடரோ தம் வாயால் கெடுவார். அவரது பேச்சு மடமையில் தொடங்கும். முழு பைத்தியத்தில் போய் முடியும். மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார். என்ன பேசப்போகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல இயலாது. மூடர் அளவுக்கு மீறி உழைத்துத் தளர்ந்துபோவார். ஊருக்குத் திரும்பிப்போகவும் வகை அறியார். சிறுபிள்ளையை அரசனாகவும், விடியவிடிய விருந்துண்டு களிப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ கெட்டழிவாய். உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும், உரிய நேரத்தில் உண்பவர்களை, குடித்து வெறிக்காது, தன்னடக்கத்தோடு இருப்பவர்களைத் தலைவர்களாகக் ெகாண்ட நாடே நீ நீடு வாழ்வாய்.சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்; பழுது பார்க்காதவரின் வீடு இடிந்து விழும். விருந்து மனிதருக்கு மகிழ்ச்சி தரும்; திராட்சை மது வாழ்க்கையில் களிப்புத் தரும்; பணம் இருந்தால்தான் எல்லாம் கிடைக்கும்.’’ – (சபை உரையாளர் 10: 1-19ஒலியை எதிரொலி தொடர்வதுபோல், ஒரு பொருளை நிழல் தொடர்வதுபோல், தீய செயலில் ஈடுபடுபவரைத் துன்பம் தவறாது துரத்தி நிலைதடுமாறச் செய்கிறது. செய்த தவறுக்கு இதயப்பூர்வமாக வருந்துங்கள். நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். செய்த தவறுக்கு சிரத்தையுடன் வருந்துங்கள். தீமை செய்யாதிருக்கத் தொடர்ந்து முயற்சிசெய்யுங்கள். நல்லவனாக இருங்கள். மற்றவர்கள் நல்லவர்களாக இருக்க உதவுவது என்பது உபதேசம் செய்வது அல்ல. தான் நல்லவனாக வாழ்ந்துகாட்டுவது ஆகும்.- ‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ…

Related posts

இனி கல் தொடாது கை!

மனத் தெளிவிற்கு தீர்வு வேண்டும்!

விமர்சனங்களை எதிர்கொள்ள பழகுங்கள்