மிஷ்னரி ஹில் சாலை சீரமைப்பு

 

ஊட்டி, ஜூன் 10: ஊட்டி ஆர்டிஓ அலுவலர் பகுதியில் இருந்து மிஷ்னரி ஹில் செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், சாலையில் பெரும்பாலான இடங்களில் பள்ளம் ஏற்பட்டது. மேலும், சாலையின் நடுவே பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சாலை குண்டும் குழியுமாக மாறியது.இதனால் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் புளோரினா புஷ்பராஜ் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து இச்சாலையை சீரமைக்க ஊட்டி நகராட்சி நிர்வாகம் 7வது நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து, இச்சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சாலை முறையாக சீரமைக்கப்படுறதா? என்பது குறித்து நகராட்சி தலைவர் வாணீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். 10 ஆண்டுகளுக்கு பின் மிஷ்னரி ஹில் செல்லும் சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை