மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஆஷ்லே பார்டி விலகல்

சிட்னி: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் வரும் 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் மார்ச் 21ம் தேதி முதல் ஏப் 3ம்தேதி வரை பிளோரிடாவிலும் நடைபெற உள்ளது. இந்த தொடர்களில் இருந்து நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி (25) விலகி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் பட்டம் வென்ற பின்னர் பார்டி எந்த ஒரு தொடரிலும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு நான் எதிர்பார்த்த விதத்தில் எனது உடல் காயத்தில் இருந்து மீளவில்லை, இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமிக்கு என்னால் போதுமான அளவு தயாராக முடியவில்லை. இந்த போட்டிகிளல் வெல்வதற்கு தேவையான அளவில் நான் இருக்கிறேன் என்று நான் நம்பவில்லை. இதன் விளைவாக நான் இரண்டு போட்டிகளிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன். போட்டியில் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது ஆனால் எனது உடலை சரிசெய்வதில் எனது கவனம் இருக்க வேண்டும். ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் பில்லி ஜீன் கிங் கோப்பை போட்டியில் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே எனது நோக்கம்’’ என தெரிவித்துள்ளார்….

Related posts

பார்போரா ஜாஸ்மின் பலப்பரீட்சை

இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் வழியில் ரோகித் சர்மா.. உதவியாளர்களுக்காக பரிசுத் தொகையை விட்டுத்தர சம்மதம்!!

சில்லி பாய்ன்ட்…