மியான்மரில் சிக்கிய 30 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐடி நிறுவனங்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இது போன்ற நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கடந்த 5ம் தேதி அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி சென்ற 60 இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. யாங்கூனில் உள்ள இந்திய தூதரகம் எடுத்த நடவடிக்கையில் 30 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். மற்ற 30 பேரை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

தேர்தல் பத்திர வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி