மின் கட்டணத்தை திரும்பபேற வலியுறுத்தல்

 

தஞ்சாவூர், ஜூலை.23: தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியதாவது: தமிழக அரசு சமீபத்தில் மின்கடணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். மின்சார வைப்புத் தொகை, மின்சார நிலை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. புதிய மின் உற்பத்திக்கான திட்டங்கள் இல்லை. மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்திக்கு குறிப்பாக சூரிய ஒளி மின் ஊக்குவிப்பு திட்டம், காற்றாலை மின் ஊக்குவிப்பு திட்டம் ஆகியவற்றை ஊக்குவிக்கவேண்டும். மேலும் தற்பொழுது செயல்பட்டு வருகின்ற அனல், புனல், நிலக்கரி நீர்மின் திட்டங்களை சீரமைத்து, நவீனப்படுத்தி மின் உற்பத்தியை பெருக்க வேண்டும். தனியாரிடமிருந்து அதிக விலைக்கு வாங்கும் மின் கொள்முதலை குறைத்து தமிழக அரசு தன் மாநில சுயதேவைக்கு தேவயான மின் உற்பத்தியை பெருக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இதில் மாவட்ட தலைவர்கள் சங்கர் மற்றும் கௌதமன் தலைமையில் அனைவரும் வந்திருந்தனர்.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி