மின் எந்திரங்கள் கவனிக்க!

நன்றி குங்குமம் தோழி *குளிப்பதற்குச் சரியாக பதினைந்து, இருபது நிமிடங்களுக்கு முன்னதாக ‘கெய்ஸரை’ ஆன் செய்வதே சரியான முறை. சில மணி நேரம் முன்னால் ‘ஆன்’ செய்தால் மின்சாரச் செலவு கூடும். கெய்ஸரில் இருக்கும் ‘தெர்மோஸ்டாட்’ பழுதாகிவிடும்.*கெய்ஸர்களில் உள்ள வெப்பப்படுத்தும் சாதனத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றினால் தண்ணீர் விரைவில் வெந்நீர் ஆவதோடு மின்சாரமும் மிச்சமாகும்.*மின்விசிறிகளை போதுமான உயரத்தில் நிறுவப்படுவது அவசியம். ஆறடி உயரம் கொண்ட ஒருவர் கைகளை நேராக மேலே உயர்த்தினால் அவை படாத உயரத்தில் மின்விசிறி இருக்க வேண்டும்.*வாஷிங்மெஷினில் டிரையரை உபயோகிக்கும்போது வாஷ்டாப்பிலும் தண்ணீர் இருந்தால் அநாவசிய அதிர்வுகள் தவிர்க்கப்படுவதுடன் மிஷினும் எளிதில் பழுதாகாமலிருக்கும்.*வாஷிங் மெஷினில் உள்ள அழுக்கை சேகரிக்கும் துணி கிழிந்துவிட்டால் அதனை அகற்றி விட்டு குழந்தையின் பழைய சாக்ஸினை அழுக்கு சேகரிக்கும் துணியாக உபயோகிக்கலாம்.*ஏ.சியினை சர்வீஸ் செய்து பயன்படுத்தும் போது அதன் ஃபில்டரை இரு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்தால் அதிக அளவு மின்சாரம் செலவாவதை மிச்சப்படுத்தலாம்.*விரிசல் விழுந்த மின்சாதனங்களை உடனடியாக மாற்றி விடுவது அவசியம்.*மின்சாரத்தால் இயங்கும் சமையலறை சாதனங்கள் அல்லது அயன்பாக்ஸ் போன்றவற்றை உபயோகிக்கும்போது மரப்பலகை அல்லது மரமேஜை போன்றவற்றின் மீது வைப்பது பாதுகாப்பானது. அதே போல் அதனை மரப்பலகை மீது நின்றுகொண்டோ அல்லது காலில் ரப்பர் செருப்பு அணிந்து கொண்டு கையாள்வது நல்லது.தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

Related posts

கண் கருவளையம் தடுக்கும் வழிகள்!

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?