மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

பொன்னேரி: காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பணப்பயன்களை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் அங்கமான தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இதன் வாயிலில் சிஐடியு தொழிற்சங்கத்தின் அங்கமான தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும், மின் வாரியமும் நிறைவேற்றிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 32,000 பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், மின்வாரிய தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் பணப்பயன்களை காலதாமதமின்றி விரைந்து வழங்கிட வேண்டும், மின்வாரியத்தை பிரித்து தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Related posts

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ மின்னொளி பெயர்ப்பலகை பழுது: சீரமைக்க கோரிக்கை

ஜமாபந்தி நிறைவு விழா 235 பேருக்கு சான்றிதழ்கள்: கோட்டாட்சியர் வழங்கினார்