மின்னல் தாக்கி கறவை மாடு பலி

தேன்கனிக்கோட்டை, மே 4: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் வராலாறு காணாத வகையில் கடும் வெயில் வாட்டி வதைத்து, வெப்ப அலை வீசி வருகிறது. நேற்று முன்தினம் மாலை, தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள மலை பகுதி கிராமங்களான குள்ளட்டி, உனிசெட்டி, அய்யூர், அரசஜ்ஜூர் உள்ளிட்ட கிராமங்களில், திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 10நிமிடம் பெய்த மழையால் வெப்பம் சற்று தணிந்தது. இந்நிலையில், அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் மாசானிபட்டி கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்தலிங்கம் என்பவர், தான் வளர்த்து வரும் காங்கேயம் இன கறவை மாட்டை புளிய மரத்தடியில் கட்டியிருந்தார். நேற்று முன்தினம் மாலை, மின்னல் தாக்கியதில் அந்த மாடு துடிதுடித்து இறந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சித்தலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு