மின்னணு வேளாண் சந்தை உட்கட்டமைப்பு விளக்க பயிற்சி

தேன்கனிக்கோட்டை, ஜன.24: கெலமங்கலம் வட்டாரத்தில் வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்(அட்மா) கீழ் பச்சபனெட்டி கிராமத்தில், தேசிய வேளாண் சந்தை மற்றும் உட்கட்டமைப்பு குறித்து, விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் கலா தலைமை வகித்து, மானிய திட்டங்கள் மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் வினோத்குமார் கலைஞர் வேளாண் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், இடுபொருட்கள், உபகரணங்கள், பண்ணைக்கருவிகள் குறித்து விளக்கி கூறினார். வட்டார வேளாண்மை அலுவலர் பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் வினோத்குமார், சுந்தர், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா உள்ளிட்டோர் பயிற்சியளித்தனர். 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை