மின்துறைக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை:  சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் கட்டுபாட்டு அறையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லகானியுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின்தடை இருக்க கூடாது என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் உள்ள 223 துணைமின் நிலையங்களில் 1 மின்நிலையத்தில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழைநீரால் மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன் ஏற்பாடாக பி.என்.சி மில், புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 0.2% நுகர்வோருக்கு மட்டுமே மின் இணைப்பு மட்டுமே தற்காப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழுதை சீர் செய்யும் பணிகளில் புளியந்தோப்பு மேற்கு மாம்பலம் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையில் மின்கம்பங்கள் ஏதும் பழுதாகவில்லை. மின்விநியோக பிரச்னையால் எந்தவித உயிரிழப்புகளும் இதுவரையில் நடைபெறவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நிகழக்கூடாது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்த அளவு பாதிப்பும் ஏற்படவில்லை. 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது. அதே போல் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். சென்னையை பொறுத்தவரை 1,508 புகார்கள் மின்னகம் மூலம் வந்துள்ளது. 607 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 907 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. பாதிப்பு ஏற்பட்டால் மின்னகத்தின் 94987 94987 என்கிற எண்ணுக்கு உடனடியாக புகார்களை தெரிவிக்க வேண்டும்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்