மின்சார ரயில்கள் கூடுதலாக இயக்கம்

சென்னை: பயணிகள் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பயணிகள் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் நோக்கிலும் பணியாளர் சிறப்பு மின்சார ரயில் சேவை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில்  சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 56 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 70 ரயில் சேவைகளும்,  மறு மார்க்கமாக வேளச்சேரி – சென்னை கடற்கரை  இடையே 70 ரயில் சேவைகளும் வருகிற 13ம் தேதி முதல் இயக்கப்படும். அதேபோல் ஞாயிற்று கிழமைகளில் 38 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் வருகிற 15ம் தேதி முதல் 48 ரயில் சேவைகள் இயக்கப்படும். மேலும் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் 5 இலக்க எண்கள் கொண்ட அனைத்து மின்சார ரயில்களும், பணியாளர் சிறப்பு ரயில்களாக இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு

வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அரசு ஊழியர் ரூ.10 லட்சம் நூதன மோசடி: போலீசார் வழக்குப்பதிவு