மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ஜூலை 19ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு முடிவு செய்துள்ளது. சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்கழக தொமுச பேரவை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பிறகு மின்சார சட்ட திருத்த மசோதா 2021 எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதால் நாடாளுமன்றக் கூட்டம் துவங்கும் நாளான ஜூலை 19 அன்று அனைத்து பிரிவு அலுவலகங்கள் முன்பு காலை 8 மணிக்கு ஆர்ப்பாட்டமும் உணவு இடைவேளையின் பொழுது கோட்ட அலுவலகம் முன்பும், மாலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய  நாடு முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய, ஜூலை 27ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி