மின்சாரம் பாய்ந்து 3 மயில்கள் பலி

 

ஈரோடு, ஜூலை 17: ஈரோடு கொல்லம்பாளையம் வஉசி வீதியில் உள்ள மின் டிரான்ஸ்பார்மர் அருகே நேற்று காலை மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஈரோடு தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஈரோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மயிலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்த 2 வயதான பெண் மயில் உணவு தேடி பறந்து வந்தபோது, அங்கு இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் அமர முற்பட்டுள்ளது.

அப்போது, மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்ததில் மயில் பலியானது தெரியவந்தது. மயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூட்ஸ் செட் அருகே ஒரு மயிலும், பழையபாளையம் அமராவதி நகரில் ஒரு மயிலும் என நேற்று ஒரே நாளில் மின்சாரம் பாய்ந்து மொத்தம் 3 மயில்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு