மிகச்சிறந்த சுகாதார உள்கட்டமைப்புகள்…சாலை விபத்துகள் 50% குறைப்பு.. தமிழகத்தை பாராட்டிய உச்சநீதிமன்றம், மத்திய அரசு

டெல்லி : இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகச்சிறந்த சுகாதார உள்கட்டமைப்புகளை கொண்டு இருப்பதாக உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அமல்படுத்துவது தொடர்பாக காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திர சூட்,எம்.ஆர்.ஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிஸ்டாட்டில்,’ தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூப்பெற்றோர், பொதுமக்கள் உட்பட அனைத்து பிரிவினருக்கும் காப்பீட்டு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டினார். இணையவழியே நடைபெற்ற விசாரணையின் போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட், தமிழ்நாடு மிகச்சிறந்த சுகாதார கட்டமைப்புகளை கொண்டு இருப்பதாக கூறினார். கொரோனா 2வது அலையின் போது தமிழக சுகாதாரத்துறையின் சிறப்பான செயல்பாட்டை கண்கூடாக பார்க்க முடிந்தது என்றும் நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.இதனிடையே தமிழகம் சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் 50 சதவீதம் குறைத்து இலக்கை வெற்றிகரமாக எட்டிவிட்டது என்று என்று மத்திய சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டி உள்ளார்….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு