மா விளைச்சல் அதிகரிப்பு

ராயக்கோட்ைட, மே 18: ராயக்கோட்டை பகுதிகளில் மா விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், டன்னுக்கு ₹2 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையின் இருபுறமும் 30 கி.மீ தொலைவிற்கும், தர்மபுரி, ஓசூர், கெலமங்கலம் மற்றும் சூளகிரி சாலையோரங்களிலும் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன. தற்போது, மாங்காய்கள் காய்த்து தொங்குகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு, நடப்பாண்டு ராயக்கோட்டை பகுதியில் மா விளைச்சல் அமோகமாக உள்ளது.

மேலும், அதற்கேற்றாற் போல விலையும் கிடைத்து வருகிறது. ஆரம்ப நாட்களில் பீத்தர், செந்தூரா போன்ற பழங்கள் கிலோ ₹60 வரை விற்றது. இதற்கு பிறகு மல்கோவா ரகம் அறுவடைக்கு வரும். அதே போல, பெங்களூரா மாங்காய்கள் அளவில் பெரியதாக உள்ளன. இதையடுத்து, விவசாயிகளும், மாந்தோட்டங்களை குத்தகைக்கு எடுத்துள்ள வியாபாாிகளும் அவசரம், அவசரமாக மாங்காய்களை அறுவடை செய்து, ஜூஸ் கம்பெனிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். அங்கு டன் மாங்காயை ₹16 ஆயிரத்திற்கு வாங்குகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன், ஒரு டன் மாங்காயை ₹18 ஆயிரத்திற்கு வாங்கி ஜூஸ் பேக்டரிகாரர்கள், தற்போது மா வரத்து அதிகமாக இருப்பதால், ₹2 ஆயிரம் வரை விலையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து