மா மரங்களில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்

ராயக்கோட்ைட, ஆக.26: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாந்தோட்டங்கள் அமைந்துள்ளன. ராயக்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி வரையும் சாலை இருபுறமும் மாந்தோட்டங்களாகவே காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக மா காப்பு குறைந்ததால், மா தோட்டங்களை குத்தகைக்கு பிடித்த மா வியாபாரிகள் நஷ்டமடைந்தனர். மா பழங்களில் புழுக்கள் அதிகமாக இருந்ததால் மக்களும் மா பழத்தை சாப்பிடுவதை தவிர்த்தனர். மேலும் மா காப்பு குறைந்ததற்கு காரணமாக பூக்கள் தாமதமாக விட்டதால்தான் என்று கூறினர். வழக்கமாக ஜனவரி மாதங்களில் பூக்கள் விடும்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளில், தாமதமாக மார்ச் மாதத்தில் பூக்கள் பூத்தாால் காய்ப்பு வெகுவாக குறைந்தது. பெரும்பாலும் மா தோட்டங்களிலுள்ள மரங்களில் பாதி அளவு மரங்கள் கூட காய்புவிடாமல் வெறும் மரமாகவே இருந்தது. அதனால் விளைச்சலின்றி மா வியாபாரிகள் நஷ்டமடைந்தனர். இந்நிலையில் கடந்த 2 வருடங்களைக்காட்டிலும், இந்த வருடம் மா தோட்டங்களிலுள்ள மரங்களுக்கு தேவையான நீர் ஆதாரமான மழை பெய்துள்ளதால் நல்ல காய்ப்பு இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த வருடம் காய்ப்பு இல்லாத நிலையில், மா மரங்களில் தற்போது கோடை கால சீசனை விட, மா மரங்களில் மாம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ராயக்கோட்டை பகுதியில் பல்வேறு தோட்டங்களில் மா மரங்களில் தற்போது பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இப்போது கோடை மாங்காய் காய்த்துவிட்டால், மா சீசனில் காய்விடுமா என்று சந்தேகம் மா வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று விவசாயிகள் ெதரிவித்துள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி