மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து சட்டத்தை அமல்படுத்திய மாநகராட்சி ஆணையரே மாஸ்க் அணியாமல் பேட்டி

சென்னை: சென்னையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை அமல்படுத்திய சென்னை மாநகராட்சி ஆணையரே மாஸ்க் அணியாமல் ஊடகங்களுக்கு பேட்டியளித்த சம்பவம் இணையதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மாஸ்க் அணியாதவர்கள் பிடிபட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று காலை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறினார்.பேட்டியளிக்கும்போது ஆணையர் பிரகாஷ் மாஸ்க் அணியாமல் இருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிடுபவர் முன்னு தாரணமாக இருந்தால் தான் மக்களும் நோயின் தீவிரத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் இருப்பார்கள். ஆனால் அவர் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக பேட்டியளித்தது கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.பிரதமர் மோடி கூட அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். தனி அறையில் ஒரு சில அதிகாரிகளுடன் இருந்து கொண்டு கூட்டத்தை நடத்தினாலும் அவர் மாஸ்க் அணிந்து முன்னுதாரணமாக இருக்கிறார். ஆனால் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாஸ்க் அணியாமல் பத்திரிகையாளர்கள் முன்பு அலட்சியமாக கூறிய நிகழ்வு கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. ஏற்கனவே இதேபோன்று சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேசும் கொரோனா காலகட்டத்தில் மாஸ்க் அணியாமல் தொடர்ந்து பேட்டி அளித்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது இவரது செயல்பாடும் அதேபோன்று உள்ளது என்று மக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்