மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த ஆலோசனை

 

பழநி, ஜூன் 3: நெல், கரும்பு மற்றும் சிறு தானியங்களை தாக்கும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி மற்றும் தொப்பம்பட்டி வட்டாரங்களில் நெல், கரும்பு, சிறு தானியங்கள், பருத்திப்பயிர்கள், மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பயிர்களில் தற்போது மாவுப்பூச்சிகள் தென்படுகிறது. மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது,

வயலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கிரிப்டோளமஸ் பொறி வண்டுகளை ஏக்கருக்கு 600 எண்கள் வீதம் பயன்படுத்த வேண்டும். 5% வேப்பங்கொட்டை கரைசலை ஒட்டும் திரவத்துடன் கலந்து பயன்படுத்த வேண்டும். மேலும், ரசாயன மருந்துகளாக புரபனோபஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி, இமிடா குளேபிரிட் 0.5 மில்லி, தயோ மீத்தாக்சான் ஒரு கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். மருந்து தெளிக்கும் போது ஒட்டும் திரவத்தை பயன்டுத்துவது அவசியம். மருந்தை சுழற்சி முறையில் பயன்டுத்துவதே சிறந்தது. இவ்வாறு கூறினர்.

 

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு