மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் செலுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மாவீரன் அழகு முத்துக்கோன்-உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம். 18ம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா இடமும்-மங்காப் புகழும் கொண்ட அரிமா நெஞ்சம் அவரது! கட்டாலங்குளத்துக் காவிய நாயகன் புகழ் வாழ்க….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி