மாவட்ட கோகோ போட்டிக்கு நத்தம் அரசு பள்ளி மாணவர்கள் ‘செலக்ட்’

நத்தம், ஆக. 9: திண்டுக்கல் மாவட்டத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியிலும், செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. இதில் 14, 17, 19 வயதிக்குட்பட்ட மாணவர்களுக்கு கோகோ போட்டிகள் நடந்தன. இதில் 33 அணியினர் கலந்து கொண்டனர். முடிவில் 14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் மூன்று பிரிவுகளிலும் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று 6வது முறையாக மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் வீரமணி, விளையாட்டு துறை இயக்குநர் சம்சுதீன், உடற்கல்வி ஆசிரியர் சோலைமலை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்