மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 126 பேர் கைது

தேனி, ஜூலை 4: தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்ட ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த 126 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்க கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் தேனி அல்லி நகரத்தில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு கூட்டு நடவடிக்கை குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தலைமை வகித்தார். போராட்டத்தின் போது தமிழ்நாடு அரசு தொடக்க கல்வி அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை மாற்றுப் பணிக்கு செல்ல விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தி வேறு மாவட்டங்களுக்கு மாற்றும் நடவடிக்கை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய, ஆசிரியைகள் 126 பேரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை