மாவட்ட அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல், ஆக.22: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும், மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம், புதுச்சத்திரம் வட்டாரம், ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில் வருகிற செப்டம்பர் 2ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும் கலந்துகொண்டு, பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சி மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளலாம்.

முகாம்களில் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்கள், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், நாமக்கல் மாவட்டம். தொலைபேசி எண் 04286 – 281131க்கு தொடர்பு கொண்டு, தங்களது நிறுவனத்தின் பெயரை 1ம்தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்