மாவட்டம் முழுவதும் கலைஞர் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 

திருவள்ளூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க மாவட்டம் முழுவதும் கலைஞர் 101வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அண்ணதானம் வழங்கப்பட்டது. மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழாவை கடந்த ஒரு வருடமாக தமிழக முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் 101 வது பிறந்தநாள் விழாவை நேற்று தமிழ்நாடு முழுவதும் திமுக வினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், கிளை, வார்டு திமுக சார்பில் கொடியேற்று விழா, இனிப்பு வழங்கும் விழா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஆகியவை எளிமையாக நடைபெற்றது.
இந்நிலையில் திருவள்ளூர் ஒன்றிய திமுக சார்பில் புன்னப்பாக்கம் கிராமத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி க.முகமது ரஃபி பொதுமக்கள் 500 பேருக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

இந்த விழாவில் நிர்வாகிகள் ஆமோஸ், ஞானரத்தினம், குமார், விக்னேஷ், முகேஷ், சுகுமார், ஹபிபுல்லா உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆவடி: ஆவடி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் தலைமையில் நேற்று காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. இதில் ஒரு பகுதியாக பருத்திப்பட்டு, லாசர் நகர், அய்யன்குளம், கோவர்த்தனகிரி நகர், ஆனந்த நகர், வசந்த் நகர் ஆகிய பகுதிகளில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுவையான பிரியாணி உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜி.உதயகுமார், கே.ஜே.ரமேஷ், ஜெரால்டு, சன்.பிரகாஷ், பேபி சேகர், நாராயண பிரசாத், பொன் விஜயன் மற்றும் மாவட்ட, மாநகர, வட்ட, திமுக நிர்வாகிகள் என மாமன்ற உறுப்பினர்கள் என உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூந்தமல்லி: பூந்தமல்லியில் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா நகர திமுக செயலாளர் திருமலை தலைமையில் நேற்று நடைபெற்றது.

பூந்தமல்லி கரையான் சாவடியில் உள்ள நகர திமுக அலுவலக அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக கொடியை ஏற்றி வைத்து கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் பூந்தமல்லி கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், பூந்தமல்லி நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர அவைத் தலைவர் எச்.தாஜூதீன், நகர நிர்வாகிகள் துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டெல்லி ராணி மலர்மண்ணன், அசோக்குமார், புண்ணியகோட்டி, அன்பழகன், சௌந்தரராஜன் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி பேருர், ஆரம்பாக்கம், எகுமதுரை பகுதிகளில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழாவில், திமுக கொடியேற்றி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் டி.மஸ்தான் வரவேற்றார்.

முன்னாள் எம்எல்ஏக்கள் இஏபி. சிவாஜி, சி.எச்.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் முர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, ரமேஷ், கதிர், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், தலைமை திமுக பேச்சாளர் தமிழ்சாதிக், பேரூர் செயலாளர் அறிவழகன், வழக்கறிஞர் தீனதயாளன் இலக்கிய அணி நிர்வாகிகள் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, நத்தம் இளவரசன், தோக்கம்மூர் மணி, மாவட்ட பிரதிநிதி ராமஜெயம், மேற்கு, தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உதயகாந்தம்மள், திருஞானம், பரத்குமார், முர்த்தி,

திருமலை, புருஷோத்தமன், வெங்கடேசன், ஆரம்பாக்கம் நிர்வாகிகள் மனோகரன், ராஜா, கஜேந்திரன், ஏழுமலை, வாசு, அப்பாஸ், ராஜேந்திரன், சேகர், மஸ்தான், அங்கமுத்து, இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், வடிவேலு, எகுமதுரை திமுக நிர்வாகிகள் சேஷாத்திரி, செல்வராஜ், குமார், கிரி, ஜெயராஜ், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, கும்மிடிப்பூண்டி பஜாரில் பேரூராட்சித் தலைவர் சகிலா அறிவழகன் ஏற்பாட்டில் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் ஆரம்பாக்கம் பகுதியில் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து எகுமதுரை ஊராட்சியில் ஒன்றிய துணை செயலாளர் மஸ்தான் ஏற்பாட்டில் 300 ஏழைகளுக்கு சில்வர் குடங்களையும், 500 பேருக்கு பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கி கலைஞர் கொண்டு வந்த பல்வேறு சாதனைகளை விலக்கி சிறப்புரையாற்றினார். இதில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியாக திமுக நிர்வாகி மகேஷ் நன்றியுரை கூறினார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்