மாவட்டத்தில் 85 மையங்களில் 21,542 மாணவர்கள் எழுதினர்

கிருஷ்ணகிரி, மார்ச் 5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21,542 மாணவ, மாணவிகள் எழுதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று 85 மையங்களில் தொடங்கியது. இதில், 403 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 197 அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 404 மாணவர்களும், 11 ஆயிரத்து 541 மாணவிகளும் என மொத்தம் 21,945 பேர் பிளஸ்1 பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 6,358 மாணவர்கள், 6,606 மாணவிகள் என 12,964 பேரும், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 4,046 மாணவர்களும், 4,935மாணவிகளும் என 8,981 பேரும் என மொத்தம் 21,945 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். நேற்று நடந்த தேர்வை, 21,542 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 403 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

மாணவ, மாணவிகள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு பஸ் வசதிகளும், தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள், காவல்துறை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்க 121 பறக்கும் படை அலுவலர்கள், 85 முதன்மை கண்காணிப்பாளர்கள், 85 துறை சார்ந்த அலுவலர்கள், 33 வழித்தட அலுவலர்கள் தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி; 3 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு திடீரென தீப்பிடித்த வேப்பமரம்