மாவட்டத்தில் 8 இண்ட்கோ தொழிற்சாலைகளை ரூ.41.38 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி தீவிரம்

பந்தலூர், மார்ச் 7: பந்தலூர் அருகே அத்திக்குன்னா அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திக்குன்னா தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

மேலும், பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளியும், காலை சிற்றுண்டி உணவு கூடமும் உள்ளது. சுற்று வட்டார பகுதிகளான அத்திமாநகர், கே.கே.நகர், உப்பட்டி, சேலக்குன்னு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியை சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் வெளி ஆட்கள் பள்ளி வளாகத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால், பள்ளிக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை சுற்றுச்சுவர் அமைக்காமல் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அத்திக்குன்னா பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நாளை சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்: மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுகோள்

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் கள ஆய்வு