மாவட்டத்தில் 4,300 புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை

 

கோவை: கோவை மாவட்டத்தில் 1,253 முழுநேர நியாய விலைக்கடைகள், 289 பகுதி நேர நியாய விலை கடைகள் மொத்தம் 1,542 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் 11 லட்சத்து 41 ஆயிரம் 886 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு 34 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் சுமார் 90 ஆயிரம் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் போன்ற சேவைகள் உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் 2023 முதல் பெறப்பட்ட புதிய மின்னணு குடும்ப அட்டைகள் கோரி 15 ஆயிரம் வரப்பெற்ற விண்ணப்பங்களில் தகுதியுள்ள 6,900 நபர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டும், 5,444 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒப்புதல் வழங்கப்பட்ட புதிய மின்னணு குடும்ப அட்டைகளில் தற்போது 4,300 புதிய குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 2,600 அட்டைகள் அச்சிடும்பணி நடைபெற்று வருகிறது.

தற்போது புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விநியோகம் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், விண்ணப்பித்த சிலருக்கு குறைபாடுகள் காரணமாக அட்டைகள் கிடைக்காத நிலை உள்ளது. அவர்கள் மீண்டும் மனு அளித்தால் மனு குறித்து ஆய்வு செய்து அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை