மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் துவக்கி வைத்து, நேரில் ஆய்வு செய்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் 15 முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி துவக்கி வைத்தார். அப்போது, 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள 444 பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 62 ஆயிரத்து 343 மாணவ, மாணவிகளுக்கு 51 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், பயிற்சி கலெக்டர் அபிநயா, நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர். கோவிந்தன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, தாசில்தார் சரவணன், மருத்துவ அலுவலர் டாக்டர். இனியாள்மண்டோதரி, தலைமையாசிரியர் சேரலாதன்  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்ட முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று(நேற்று) நடைபெற்ற முகாம்களில் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் நடைபெறும் முகாம்களில் மீதம் உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி துவக்கி வைத்தார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் கௌதம், பிடிஏ நிர்வாகிகள் பழனி, முனியப்பன், தலைமை ஆசிரியர் காந்திமதி முன்னிலையில், டாக்டர்கள் சரவணன், கதிரேசன், சோபன் தலைமையில் கிராம சுகாதார செவிலியர்கள் சக்குபாய், கலாவதி, சிவகாமி, காஞ்சனா ஆகியோர் 400க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.காவேரிப்பட்டணம் :காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தாமரைசெல்வி, உதவித் தலைமை ஆசிரியர் செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, இளங்கோ, துரைராஜ், அமுதா, பாரத சாரணர் சங்க மாவட்ட துணை செயலாளர் பவுன்ராஜ், ஆசிரியர்கள் கோபு, சரவணன், செந்தில், சுரேஷ்பாபு, மருத்துவர்கள் சண்முகம், சிபிராஜ், சோமசுந்தரம், செவிலியர் சிவரஞ்சனி, கிராம சுகாதார செவிலியர்கள் தமிழ்ச்செல்வி, சைலஜா, தேவி லட்சுமி, பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமில் 600 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை